/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு குறுமைய பூப்பந்து போட்டி: மாணவ, மாணவியர் அணி அபாரம்
/
கிழக்கு குறுமைய பூப்பந்து போட்டி: மாணவ, மாணவியர் அணி அபாரம்
கிழக்கு குறுமைய பூப்பந்து போட்டி: மாணவ, மாணவியர் அணி அபாரம்
கிழக்கு குறுமைய பூப்பந்து போட்டி: மாணவ, மாணவியர் அணி அபாரம்
ADDED : செப் 01, 2024 10:42 PM
கோவை:கிழக்கு குறுமைய பூப்பந்து போட்டியில், ஜி.ராமசாமி நாயுடு பள்ளியின் இரு பாலர் அணியினர் மூன்று பிரிவுகளிலும் வென்று, பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், மண்டல அளவிலான கிழக்கு குறுமைய பூப்பந்து போட்டி, தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், 14,17,19 வயதுக்குட்பட்டோர் என, மூன்று பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் தலா ஆறு அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு, மாணவ, மாணவியருக்கான, 14, 17, 19 என, மூன்று பிரிவுகளிலும், ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியும், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியும் தகுதிபெற்றன.
பரபரப்பான ஆட்டத்தில், 14, 17, 19 என மூன்று பிரிவுகளிலும் ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியின் மாணவ, மாணவியர் அணியினர், 2-0 என்ற நேர் 'செட்' கணக்கில், தியாகி என்.ஜி.ஆர்., அணியினரை வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.