/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதில் சுவரை உடைத்து யானை அட்டகாசம்
/
மதில் சுவரை உடைத்து யானை அட்டகாசம்
ADDED : மார் 30, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்;மதுக்கரை அருகே ஷூட்டிங் ரேஞ்ச் பகுதிக்கு செல்லும் வழியில் வையாபுரி வீதி உள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் குடியிருந்து வருகிறார்.
நேற்று அதிகாலை குட்டியுடன் வந்த யானை ஒன்று, அருகேயுள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவர், கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. வீட்டின் முன் கதவை உடைத்தது. சப்தம் கேட்டு எழுந்த சக்திவேல் வந்து பார்த்தபோது, யானை தும்பிக்கையால் வீட்டினுள் தேடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகே வசிப்போர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,
அங்கு வந்த வனத்துறையினர் மூவர் சப்தமிட்டும், வெளிச்சம் ஏற்படுத்தியும் யானையை விரட்டினர். 45 நிமிடங்களுக்குப் பின் யானை வனத்திற்குள் சென்றது.

