/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் கூரையை பிரித்த யானை; டீக்கடையில் தஞ்சம் புகுந்த மூதாட்டி
/
வீட்டின் கூரையை பிரித்த யானை; டீக்கடையில் தஞ்சம் புகுந்த மூதாட்டி
வீட்டின் கூரையை பிரித்த யானை; டீக்கடையில் தஞ்சம் புகுந்த மூதாட்டி
வீட்டின் கூரையை பிரித்த யானை; டீக்கடையில் தஞ்சம் புகுந்த மூதாட்டி
ADDED : ஆக 07, 2024 11:51 PM

தொண்டாமுத்தூர் : முட்டத்துவயலில், அதிகாலையில் ஒற்றைக் காட்டு யானை வீட்டின் கூரையை பிரித்து, சேதப்படுத்தியது. வீட்டிலிருந்த மூதாட்டி தப்பி, டீக்கடையில் தஞ்சம் புகுந்தார்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட முட்டத்துவயலில் உள்ள ராமாத்தாள்,62 என்பவரின் தோட்டத்திற்குள், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது. தோட்டத்தில் உள்ள வீட்டில், ராமாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
அப்போது யானை, வீட்டின் தகர சீட் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தியது.
சத்தம் கேட்டு எழுந்த ராமாத்தாள், வீட்டின் பின்புற கதவை திறந்து, அருகிலுள்ள டீக்கடையில் தஞ்சம் புகுந்து தப்பினார். ஒற்றை யானை, சாவகாசமாக வீட்டில் இருந்த அரிசி மற்றும் புண்ணாக்கை உண்டு விட்டு, பூண்டி வனப்பகுதிக்குள் சென்றது.