/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்கு 'சன்ஷேடு' கட்டாயம் வேண்டும் ; நன்மை, தீமையை அலசுகிறார் பொறியாளர்
/
வீட்டுக்கு 'சன்ஷேடு' கட்டாயம் வேண்டும் ; நன்மை, தீமையை அலசுகிறார் பொறியாளர்
வீட்டுக்கு 'சன்ஷேடு' கட்டாயம் வேண்டும் ; நன்மை, தீமையை அலசுகிறார் பொறியாளர்
வீட்டுக்கு 'சன்ஷேடு' கட்டாயம் வேண்டும் ; நன்மை, தீமையை அலசுகிறார் பொறியாளர்
ADDED : மே 11, 2024 12:51 AM

வீட்டு ஜன்னல்களின் மேற்பகுதியில் அமைக்கப்படும் சன்ஷேடுகளின் அவசியம் குறித்து விளக்குகிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.(காட்சியா) செயற்குழு உறுப்பினரும், இன்ஜினியருமான ரவிச்சந்திரன்:
நாம் கட்டும் வீட்டிற்கு சன் ஷேடு மிகவும் அவசியம். தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, சன் ஷேடு மிக அவசியம். ஆனால் இன்று சன்ஷேடு அமைப்பது மெல்ல குறைந்து வருகிறது.
சன்ஷேடு அமைப்பதால், கட்டடத்தின் முகப்பு எலிவேஷன் மற்றும் அழகு பாதிக்கப்படும் என்று நினைத்தும், கட்டுமான செலவு கூடும் என்ற எண்ணத்திலும், சன்ஷேடு அமைப்பதை தவிக்கின்றனர். அப்படியே அமைத்தாலும், வெறும் ஆறு அங்குலத்துக்கு மட்டுமே அமைக்கின்றனர். இதனால் பயனில்லை.
சன்ஷேடு குறைந்த அளவாக, 2 அடி அகலம் இருக்க வேண்டும். சன்ஷேடு, ஜன்னலின் இடம் வலம் என, 9 அங்குலத்திற்கு வளர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் கடும் வெயிலில் இருந்து, புற ஊதா கதிர்கள், வீட்டினுள் புகாமல்பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நன்கு வடிவமைக்கப்பட்ட சன்ஷேடு, அறையின் வெப்பநிலையை 8 முதல் 25 சதவீதம் வரை குறைக்கும். நேரடி சூரிய புற ஊதாக் கதிர் ஒளியை, 25 சதவீதம் சன் ஷேடு குறைப்பதும் குளிர்சாதனம் மற்றும் மின்விசிறி பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்காலத்தில் தாரைதாரையாக மழைநீர் வீட்டினுள் நுழையாமல் பாதுகாக்கும்.
நன்மையும் தீமையும்
ஜன்னல் பிரேம், ஜன்னல் ஷட்டர், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பிற பொருள்கள் மழை நீரால் சேதமடையாமல் பாதுகாக்கும். அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தால், அவர்கள் வீசும் தேவையற்ற பொருட்கள், கழிவுகள் புகை போன்றவற்றை நம் வீட்டினுள் புகாதவாறு காத்துக் கொள்ளும். இவ்வளவு நன்மைகள், சன் ஷேடில் இருந்த போதிலும் சில ஆபத்துகளும் உள்ளன.
பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சன் ஷேடுகளின் தடிமன், 3 அங்குலம் தடிமன் அளவே கான்கிரீட் இடப்படுகிறது. எனவே இதன் மீது பாரம் ஏற்றாமல் இருப்பது அவசியம். சில வீடுகளில், சன்ஷேடின் மேல் 'ஏசி' யூனிட் அமைக்கிறார்கள்.
மேலும் சிலர், சன் ஷேடுகளை மாடிப்படியின் லேண்டிங் ஸ்லேப்பாக பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பயன்படுத்தினால், சில காலங்கள் கழித்து பாரம் தாங்காமல் சன்ஷெட் கழன்று ஆபத்துஏற்படுத்தும்.
பராமரிக்கவும் வேண்டும்
இவற்றை பராமரிப்பதில் அதிக கவனம் வேண்டும். சன்ஷேடுகள் மீது குப்பை தூசிகள் மற்றும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது குப்பைகளை அகற்றி. பெயின்ட் அடித்து வெடிப்பு வராமல், பராமரிக்க வேண்டும்.
இவ்வளவு நன்மை தரும் சன்ஷேடுகளை, நம் வீடுகளில் எங்கெங்கு தேவையோ அங்கு மட்டும் அமைத்து கொண்டு, வீட்டின் அழகை காப்பாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.