/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரகுரு நிறுவனங்களின் 'யுகம் 2025' துவக்கம்
/
குமரகுரு நிறுவனங்களின் 'யுகம் 2025' துவக்கம்
ADDED : மார் 06, 2025 11:56 PM

கோவை; குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப-, கலாச்சார,- விளையாட்டு விழாவான 'யுகம் 2025' ன் 13வது பதிப்பு, நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பாதுகாவலர், ஜெகதீஷ் பகன், விழாவைதுவக்கி வைத்து பேசுகையில்,''பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு இடையேசிக்கலான இணைப்புகள் உள்ளன. சில மனித நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்தை வேகப்படுத்துகின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட கார்பன் கேப்ச்சர் அண்ட் ஸ்டோரேஜ் போன்ற நடவடிக்கைகள் உட்பட உலக நாடுகளால் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிய முயற்சி கூட காலப்போக்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.
விழாவில், கலை, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஏற்ப, 33 தொழில்நுட்ப போட்டிகள், 57 தொழில்நுட்பம் சாராத நிகழ்வுகள், 21 கலாச்சார நிகழ்வுகள், 21 இலக்கிய அமர்வுகள், 15 கலை நிகழ்ச்சிகள் என,100க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
முதல் நாளில், 'இன்ஸ்பயர் இந்தியா இளைஞர் மாநாடு' பிரபல திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன், எவரெஸ்ட் சிகரம் ஏறிய சங்கீதா சிந்தி பால் உள்ளிட்ட, 16 பேச்சாளர்கள் பங்கேற்றனர்.