/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுார் பள்ளத்தில் அரைவட்டச் சாலை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
/
சங்கனுார் பள்ளத்தில் அரைவட்டச் சாலை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
சங்கனுார் பள்ளத்தில் அரைவட்டச் சாலை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
சங்கனுார் பள்ளத்தில் அரைவட்டச் சாலை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
ADDED : மார் 08, 2025 11:31 PM

கோவை: நகரப் பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மேட்டுப்பாளையம் ரோடு - சத்தி ரோடு - அவிநாசி ரோடு - திருச்சி ரோட்டை இணைக்கும் வகையில், சங்கனுார் பள்ளத்தின் கரையை பலப்படுத்தி, இருபுறமும் தலா, 5.5 மீட்டர் அகலத்துக்கு தார் ரோடு போட்டு, அரை வட்டச்சாலை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
2.5 கி.மீ., துாரத்துக்கு கரையை பலப்படுத்தி இதுவரை, 2.200 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றாமல் தடுப்புச்சுவர் கட்டியதால், ஒரு வீடு இடிந்து விழுந்தது. அதனால், 300 மீட்டர் துாரத்துக்கு இன்னும் கான்கிரீட் தடுப்பு அமைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இச்சூழலில், நான்கு ரோடுகளையும் இணைக்கும் வகையில் அரைவட்டச் சாலை உருவாக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு நேற்று கள ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், திட்டப்பணிகள் தொடர்பாக விளக்கினார்.
ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்துக்கு அனுப்பி விட்டு, அரைவட்டச்சாலைக்கு 'டெண்டர்' கோரி பணிகளை செய்ய, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியிருக்கிறார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''மேட்டுப்பாளையம் ரோட்டில் துவங்கி, திருச்சி ரோடு வரை, 8.8 கி.மீ., துாரத்துக்கு சங்கனுார் பள்ளத்தின் இரு கரையிலும் தலா, 5.5 மீட்டர் அகலத்துக்கு ரோடு போடப்பட்டு, அரைவட்டச் சாலை அமைக்கப்படும். கரைகள் பலப்படுத்தப்பட்டு, கான்கிரீட் சுவர் கட்டப்படும். 1,700 வீடுகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பயனாளிகள் விடுபடாமல் இருக்க மீண்டும் துல்லியமாக கணக்கெடுக்க அறிவுறுத்தியிருக்கிறோம்,'' என்றார்.