/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகார் கொடுத்த தம்பதியை மிரட்டிய கும்பல்!
/
புகார் கொடுத்த தம்பதியை மிரட்டிய கும்பல்!
ADDED : ஜூலை 11, 2024 11:51 PM
கோவை, : பணப்பிரச்னை தொடர்பான விசாரணை முடிந்து வெளியே வந்த தம்பதியை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
காளப்பட்டி, பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் சேஷாத்திரி,31. பணப்பிரச்னை தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் இவர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
விசாரணைக்காக இவரும், இவரது மனைவியும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றிருந்தனர்.
அப்போது, எதிர் மனுதாரர்களான நிஜாம், முகமது ரபீக் ஆகியோர் பணத்தை திரும்பத்தருவதாகவும், அதற்கு காலஅவகாசம் கேட்டும், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எழுதிக்கொடுத்தனர். வெளியே வந்த இருவரும், சேஷாத்திரியையும், அவரதுமனைவியையும் மிரட்டியுள்ளனர்.
மேலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தம்பதியரை,நிஜாம் மற்றும் காரில் வந்த ஐந்து பேர் கும்பல்மிரட்டியுள்ளது. இதுகுறித்து, சேஷாத்திரி அளித்த புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.