/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்
/
அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்
ADDED : மே 24, 2024 01:01 AM
கோவை:கோவை வ.உ.சி., மைதானத்தில், நாளை மாலை, 5:00 மணிக்கு துவங்கும் அரசு பொருட்காட்சியை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கிவைக்கவுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.
இப்பொருட்காட்சி 25ம் தேதி நாளை முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். தினந்தோறும் மாலை, 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை, 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் நடைபெறும்.
இதற்கு கட்டணமாக, பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், பள்ளிகள் வாயிலாக, அழைத்து வரப்படும் மாணவர்களுக்கு 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பொழுதுபோக்கு அம்சத்துடன் துவங்கப்பட உள்ள அரசு பொருட்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.