/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு வண்டியில் மணப்பெண்ணை அழைத்து வந்த மாப்பிள்ளை
/
மாட்டு வண்டியில் மணப்பெண்ணை அழைத்து வந்த மாப்பிள்ளை
மாட்டு வண்டியில் மணப்பெண்ணை அழைத்து வந்த மாப்பிள்ளை
மாட்டு வண்டியில் மணப்பெண்ணை அழைத்து வந்த மாப்பிள்ளை
ADDED : மார் 09, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவை சேர்ந்த புதுமண தம்பதி, பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்ததை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையதை சேர்ந்தவர் சஞ்சய்வினித். இவருக்கு நேற்று கோவையை சேர்ந்த மணப்பெண் தாரணி என்பவருடன் திருமணம் நடந்தது.
இதில், மாப்பிள்ளை, பெண்ணை மணக்கோலத்தில் தனது வீட்டிற்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் அழைத்து வந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் கண்டு ரசித்தனர்.
இதைக்கண்ட அவ்வழியில் சென்றவர்கள் சிலர், மணமக்களை தங்களது மொபைல்போனில் படம் பிடித்தனர்.