/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிதமான மழையால் தணிந்தது வெப்பம்
/
மிதமான மழையால் தணிந்தது வெப்பம்
ADDED : மே 10, 2024 01:59 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வட்டாரதில் மழை பொழிவு இல்லாத நிலையில், கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் பெரும்பாலான இடங்களில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்ததால், வெட்டப்பட்டது. சில இடங்களில் உள்ள பயிர்கள் காய்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
மேலும், வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால், கோடை காலத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். காலை, 11:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, ரோட்டில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், மிதமான மழை பெய்தது. இடி, மின்னலுடன் தொடர்ந்து பெய்த மழையால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வெப்பம் தணிந்தது. இதனால் விவசாயிகள் அனல் காற்று, வெப்ப அலையில் இருந்து நிம்மதி அடைந்தனர்.
சில இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. சமத்துார் பகுதியில் ரோட்டில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதித்தது.