/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனக்கல்லுாரியை கண்டு வியந்த பிஜி நாட்டு ஹை கமிஷனர்
/
வனக்கல்லுாரியை கண்டு வியந்த பிஜி நாட்டு ஹை கமிஷனர்
வனக்கல்லுாரியை கண்டு வியந்த பிஜி நாட்டு ஹை கமிஷனர்
வனக்கல்லுாரியை கண்டு வியந்த பிஜி நாட்டு ஹை கமிஷனர்
ADDED : ஆக 13, 2024 01:24 AM

மேட்டுப்பாளையம்:பிஜி நாட்டின் ஹை கமிஷனர் ஜெகநாத் சமி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிக்கு நேற்று வருகை புரிந்தார். அவர் வனக்கல்லூரியில் உள்ள தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிகளை பார்வையிட்டு வியப்படைந்தார்.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, வனத்துறையின் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. வனத்தை மேம்படுத்த தொழில்நுட்பங்களை உருவாக்குதல், அரசு சாரா அமைப்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது, வன வளங்களின் உற்பத்தி, செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய தொழில்முறையை உருவாக்குதல், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள் வாயிலாக இயற்கை காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கல்லூரிக்கு நேற்று பிஜி நாட்டின் ஹை கமிஷனர் ஜெகநாத் சமி வருகை புரிந்தார். அவர் வனக்கல்லூரியில் உள்ள ஆராய்ச்சிகளை பார்வையிட்டு வியப்படைந்தார்.
இதுகுறித்து வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் கூறுகையில், பிஜி நாட்டின் காலநிலையும் இங்குள்ள காலநிலையும் ஒத்து போகிறது. பிஜி நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 1 ஏக்கர் நிலத்தில் லாபம் தரும் வகையில் மரம் வளர்ப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ந்தது.
நம் வனக்கல்லூரியின் மரங்கள் வளர்ப்பு தொழில்நுட்பம், வேளாண் காடுகள் மர தயாரிப்பு பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு வகையிலான தொழில்நுட்பங்களையும், ஆராய்ச்சிகளையும் அவர் பார்வையிட்டு வியந்தார்.
பிஜி நாட்டு மக்களுக்கு நம் வனக்கல்லூரியின் தொழில்நுட்பங்களை கொண்டு போய் சேர்க்கவும், அங்குள்ள மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயிலவும், இங்குள்ள மாணவர்கள் அங்கு கல்வி பயிலவும் அவர் விரும்பினார்.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஆர்வமாக உள்ளார், என்றார்.