/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படையல் பொருட்களால் ஏழைகளின் பசி தீர்ந்தது!
/
படையல் பொருட்களால் ஏழைகளின் பசி தீர்ந்தது!
ADDED : ஆக 04, 2024 05:32 AM

தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறையில், ஆடிப்பெருக்கையொட்டி, பொதுமக்கள் வைத்த படையலை தன்னார்வலர்கள் சேகரித்து, பசியால் வாடும் மக்களுக்கு வழங்கினர்.
ஆடிப்பெருக்கையொட்டி, பேரூர் படித்துறையில், நேற்று ஏராளமான பொதுமக்கள், உணவு பண்டங்கள், இனிப்பு வகைகள், பழங்கள் வைத்து படையலிட்டு, வழிபாடு நடத்தினர். இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் இணைந்து, படித்துறையில், பொதுமக்கள் படையலிட்ட பொருட்களை, தன்னார்வலர்கள் தனித்தனியாக பிரித்தனர்.
இதில், பொதுமக்கள் விட்டுச்சென்ற, சுமார் 2,000 கிலோ எடையுள்ள ஆப்பிள், திராட்சை, கொய்யா, வாழைப்பழம், தேங்காய், இனிப்புகள் மற்றும் புதிய துணிகளை சேகரித்தனர்.
இதனை, 'நோ புட் வேஸ்ட் ' அமைப்பினருடன் இணைந்து, கோவையில் பல்வேறு இடங்களில் பசியால் வாடும் மக்களுக்கு வழங்கினர். படித்துறையில் பிளாஸ்டிக்கையும் அகற்றினர்.