/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலில் 'எகிறிய' கட்டணம் புகாருக்குப் பின் குறைந்தது
/
முதலில் 'எகிறிய' கட்டணம் புகாருக்குப் பின் குறைந்தது
முதலில் 'எகிறிய' கட்டணம் புகாருக்குப் பின் குறைந்தது
முதலில் 'எகிறிய' கட்டணம் புகாருக்குப் பின் குறைந்தது
ADDED : மார் 05, 2025 10:59 PM

போத்தனூர்:
கோவை, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து, செல்கின்றனர். பலர் தங்களது இரு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அவ்வகையில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விபரம் குறித்த பிளக்ஸ் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வைக்கப்பட்டது. அதில், 'இங்கு யாருக்கும் இலவச பார்க்கிங் அனுமதி கிடையாது. கண்டிப்பாக டோக்கன் வாங்கி செல்லவும். டோக்கன் வாங்காத வாகனங்களுக்கு ரூ. ஆயிரம் அபராதம். நாள் கட்டணம் டூ வீலர் ரூ. 30. கார் ரூ.80 இப்படிக்கு சதர்ன் ரயில்வே, பார்க்கிங் ஸ்டாண்டு' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் குறைந்தபட்ச கட்டண விபரம் இல்லாததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். இதுகுறித்து கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு, ரயில் பயனாளர் சங்கம் சார்பில், அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிளக்ஸ் அகற்றப்பட்டது. குறைக்கப்பட்ட கட்டண விபரத்துடன் புதியதாக வேறு பிளக்ஸ் வைக்கப்பட்டது. அதில் ஒப்பந்ததாரர் பெயர், மொபைல் எண், ஒப்பந்த கால விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.