/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கிலி கருப்பராயன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பு
/
சங்கிலி கருப்பராயன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பு
சங்கிலி கருப்பராயன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பு
சங்கிலி கருப்பராயன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பு
ADDED : செப் 01, 2024 11:07 PM
கோவை;கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு, மருதமலை ரோடு சந்திப்பில் பழமை வாய்ந்த காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ள, கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
கோவை காஞ்சி காமகோடி பீடம் தலைமை அர்ச்சகர் சிவக்குமார் முன்னிலையில் மகா கும்பாபிஷேக விழா யாகம் நடந்தது.
கடந்த, 30ம் தேதி காலை 6:00 மணிக்கு முகூர்த்த கால் நடுதல் நிகழ்வுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
மதுரை அழகர் கோவில், 18ம் படி, கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து ராக்காயி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை 7:50 மணிக்கு கோபுர விமானத்தில் உள்ள கும்பத்துக்கு ,புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகம், சங்கிலி கருப்பராயன் மற்றும் பரிவார தெய்வங்கள் கணபதி, கன்னிமார், முனியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு, ராக்காயி தீர்த்தம் ஊற்றப்பட்டு, மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.
மதியம் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு மகா அன்னதானம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.