/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் தயாராகி விட்டன
/
ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் தயாராகி விட்டன
ADDED : ஏப் 16, 2024 12:52 AM

சூலூர்:ஓட்டு சாவடிகளுக்கு தேவையான பொருட்களை பிரித்து, தயார் படுத்தும் பணி, சூலூர் தாலுகா அலுவலகத்தில் தீவிரமாக நடக்கிறது.
வரும் 19ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. சூலூர் தொகுதியில், 332 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஓட்டு பதிவின் போது, ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தும், பேனா, பென்சில், ரப்பர் ஸ்டாம்ப், அழியாத மை, சீல் வைக்கும் மெழுகு, வாக்காளர் பட்டியல், படிவங்கள், கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் இயந்திரங்களில் சீல் வைத்தபின் ஒட்டும் வரிசை எண்ணுடன் கூடிய லேபிள்கள், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொருட்களை தனித்தனியாக பிரித்து, பெட்டியில் வைக்கும் பணி, சூலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது.
வயது முதிர்ந்த, நடக்க முடியாத வாக்காளர்கள், ஓட்டு சாவடி மையத்துக்கு சென்று வாக்களிக்க சக்கர நாற்காலிகள், மற்றும் பேலட் யூனிட் இயந்திரத்தை பாதுகாக்கும் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களும், சூலூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்துள்ளன.
அவற்றை சரிபார்க்கும் பணி முடிந்த பின், 18ம் தேதி ஓட்டு சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

