/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் : ஆர்.டி.ஓ., விசாரணை ஒத்திவைப்பு
/
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் : ஆர்.டி.ஓ., விசாரணை ஒத்திவைப்பு
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் : ஆர்.டி.ஓ., விசாரணை ஒத்திவைப்பு
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் : ஆர்.டி.ஓ., விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 25, 2024 11:12 PM
அன்னுார்:காதல் திருமணம் செய்த குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ., விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அன்னூர் அருகே வடக்கலூரில் காதல் திருமணம் செய்த சில குடும்பங்களை ஒதுக்கி வைத்ததாக சிலர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். பல முறை பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'இதுகுறித்து விசாரித்து நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமையில், 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு அன்னூர் தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பினரிடம் விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.