/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில செஸ் போட்டியில் 'நகர்வுகள்' அபாரம்
/
மாநில செஸ் போட்டியில் 'நகர்வுகள்' அபாரம்
ADDED : ஜூலை 22, 2024 11:20 PM

கோவை;கணபதியில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில், திறமையை வெளிப்படுத்திய வீரர்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளை வென்றனர்.
இந்தியன் செஸ் கன்சோர்ஷியம் சார்பில், கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் சர்வதேச செஸ் தினத்தையொட்டி, மாநில அளவிலான செஸ் போட்டி கணபதி ஸ்ரீ கிருஷ்ண கவுண்டர் கல்யாண மண்டபத்தில் நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு 9, 12, 16 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையிலும், ஓபன் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், துாத்துக்குடி உள்ளிட்ட, 15 மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்கள்
மாணவர்கள் 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் யுவன் அகாஷ், இளந்திரயன், ஆதிஷ் விதுன்; 12 வயது பிரிவில் கதிர் கமன், மிதுன், பிரணவ்; சிவசத்யன், அதர்வா, ஸ்ரீ ஹரிநந்தன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மாணவியர் 9 வயது பிரிவில், ஸ்ரியா, டெனியா, சதுர்வேதா; தன்யாஸ்ரீ, சிந்திழை, ராஜேஸ்வரி; ஸ்ருதி, சனா, சஸ்மிதா ஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஓபன் பிரிவில் ராம் கிருஷ்ணன், அபினேஷ், விஷ்வேஸ்வரன் ஆகியோர் முதல் முன்று இடங்களை பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், சைக்கிள், செஸ் கடிகாரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.