/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களின் பெயர்கள் பிழையின்றி இருக்க வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு

ADDED : மே 27, 2024 11:21 PM
சூலுார்;வருவாய் தீர்வாய அரசிதழில் கிராமங்களின் பெயர்கள் பிழையின்றி அச்சிடப்பட வேண்டும், என, வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தாலுகா வாரியாக ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் நடக்கும். அதில், உள்வட்ட கிராமங்கள் வாரியாக பதிவேடுகள் தணிக்கை செய்யப்படும்.
தீர்வாயம் நடக்கும் தேதி, உள் வட்ட வாரியாக கிராமங்கள் பெயர்கள் முன்னதாக அரசிதழில் வெளியிடப்படும். அதில், கிராமங்களின் பெயர்கள் பிழையின்றி அச்சிடப்பட வேண்டும், என, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர் அனுப்பிய உத்தரவில், வருவாய் தீர்வாய அரசிதழின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளியிட வேண்டும். ஆங்கில பிரதி மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதாரமாக வழங்க வேண்டியது உள்ளது.
வட்ட, உள் வட்ட கிராமங்களின் பெயர்களை எழுத்து பிழையின்றி அச்சிட வேண்டும். அதில் அச்சிடப்படும் எழுத்தாக்கமே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியான, இறுதியான வடிவமாக கருதப்படும். பேச்சு வழக்கு, சுருக்கமுறை கலந்து பயன்படுத்தக்கூடாது. அரசு பதிவேடுகளில் உள்ள பெயர்களையே இறுதி வடிவமாக கொண்டு அனைத்து அலுவல் பதிவேடுகளிலும் பயன்படுத்த வேண்டும். ஆங்கில பெயர் சரியான தமிழ் பெயரின் ஒலி பெயர்ப்பாக அமைய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.