/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் உருவாகிறார் அடுத்த கிராண்ட் மாஸ்டர்!
/
கோவையில் உருவாகிறார் அடுத்த கிராண்ட் மாஸ்டர்!
ADDED : ஜூன் 09, 2024 12:45 AM

உலக அளவில் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பெயர் பிரக்ஞானந்தா. சமீப காலமாக செஸ் விளையாட்டில், தனது முத்திரையை பதித்து வரும் இவரை பார்த்து, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள், செஸ் விளையாட ஆரம்பித்துள்ளனர்.
பிரக்ஞானந்தாவால் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு எவ்வளவு பெருமை சேர்ந்துள்ளதோ அதே போல், கோவைக்கும் பெருமை சேர்த்து வருகிறார், 14 வயதான ஆகாஷ்.
தமிழக அளவில் நடக்கும் மாநில ஓபன் செஸ் போட்டியில், ஒரு கோவை வீரர் பட்டம் வெல்வது 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. ஆகாஷ் தனது திறமையால் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறார். 2251 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ள ஆகாஷ் விரையில் ஐ.எம்., பட்டம் பெற முயற்சி செய்து வருகிறார்.
ஆகாஷிடம் பேசிய போது, ''எஸ்.இ.எஸ்., பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். நீண்ட நாட்களாக செஸ் விளையாடி வருகிறேன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது தான், என்னுடைய ஆசை. அதற்கான பயிற்சியையும், முயற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்,'' என்றார்.

