/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்தது! அரசு விருது கிடைத்ததாக கோவை கலெக்டர் பெருமிதம்
/
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்தது! அரசு விருது கிடைத்ததாக கோவை கலெக்டர் பெருமிதம்
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்தது! அரசு விருது கிடைத்ததாக கோவை கலெக்டர் பெருமிதம்
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்தது! அரசு விருது கிடைத்ததாக கோவை கலெக்டர் பெருமிதம்
ADDED : ஜூன் 27, 2024 06:07 AM

கோவை : பெண் குழந்தைகளின் பிறப்புவிகிதத்தில், முன்னேறிய மாவட்டங்களுக்கான விருது, கோவைக்கு கிடைத்துள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேனிங் சென்டர் மைய நிர்வாகிகளுக்கான சிறப்பு பயிற்சி, கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் பேசியதாவது: 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனும், பாலின விகிதாசாரத்தை சமன்படுத்தும் நோக்கத்துடனும் கொண்டு வரப்பட்டதாகும்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான, மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2021- - 2022ம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் முன்னேறிய மாவட்டங்களுக்கான தமிழக அரசின் விருது, கோவைக்கு கிடைத்துள்ளது.
பாலின விகிதம் 1000 : 961லிருந்து 1000 : 979 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கல்வியறிவு பெற்ற மக்கள் அதிகமாக இருக்கின்றனர். இருந்தபோதிலும், வட்டார அளவில் பாலின விகிதாசாரம் குறைந்து காணப்படுகிறது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சட்ட உரிமைகள், மருத்துவம், கல்வி, திருமணம், பெண் சிசுகொலை போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்கள் சமுதாயத்தை முன்னேற செய்ய, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர் ராஜசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, திறன்மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குனர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.