/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவிதை நடையில் பஞ்சபூதங்கள் சிறப்பு
/
கவிதை நடையில் பஞ்சபூதங்கள் சிறப்பு
ADDED : ஜன 14, 2025 01:30 AM

பொள்ளாச்சி, ; கம்பன் கலை மன்றத்தின் மாதாந்திர நிகழ்வில், பஞ்ச பூதங்களின் சிறப்பு மற்றும் அவற்றை பாதுகாக்கும் முறைகள் கவிதைகளாக விளக்கப்பட்டது.
பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின், 364-வது மாதாந்திர நிகழ்வு, 'புவியின் ஐந்து படைகள்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தப்பட்டது. ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு செயலாளர் கவிஞர் அவைநாயகன் தலைமை வகித்தார்.
முன்னதாக, மன்ற துணைத் தலைவர் ரமேஷ், அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வானம் என்ற தலைப்பில் கவிஞர் பாபு, காற்று என்ற தலைப்பில் கவிஞர் பொற்கொடி, தீ என்ற தலைப்பில் கவிஞர் தினேஷ்குமார், நீர் என்ற தலைப்பில் கவிஞர் குமார் மற்றும் நிலம் என்ற தலைப்பில் கவிஞர் பாலமுருகன் ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, 'தினமலர்' மாதாந்திர காலண்டர், அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு புத்தகம், விவேகானந்தர் கையேடு புத்தகங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் நசீர்அகமது, காளிமுத்து, தங்கசரவணன் ஆகியோர் செய்திருந்தனர். நிர்வாகி செல்லமுத்து நன்றி கூறினார்.

