/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேள்விகளுக்கு பதில் இல்லை: ஊராட்சி நிர்வாகத்தினர் திணறல்
/
கேள்விகளுக்கு பதில் இல்லை: ஊராட்சி நிர்வாகத்தினர் திணறல்
கேள்விகளுக்கு பதில் இல்லை: ஊராட்சி நிர்வாகத்தினர் திணறல்
கேள்விகளுக்கு பதில் இல்லை: ஊராட்சி நிர்வாகத்தினர் திணறல்
ADDED : ஆக 17, 2024 12:19 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறினர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில் கிராம சபை கூட்டம் துணை தலைவர் கருப்புசாமி தலைமையில் நடந்தது. இதில், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், மூன்று வார்டு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதம் உள்ள 5 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கூட்டத்தில், வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், ஊராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் புதர் செடிகள் அகற்றம் செய்வதில்லை. கொசு மருந்து தெளிப்பதில்லை. ஒரு ஆண்டாக மயானம் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், மயானம் புதர் சூழ்ந்து காணப்படுகிறது, என, மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான பணிகள் எப்போது துவங்கப்படும். கடந்த, 2020ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது, என்ற கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் கூற முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறினர்.

