/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுரோட்டில் பழுதாகி நின்ற பஸ் தள்ளி 'ஸ்டார்ட்' செய்த பயணியர்
/
நடுரோட்டில் பழுதாகி நின்ற பஸ் தள்ளி 'ஸ்டார்ட்' செய்த பயணியர்
நடுரோட்டில் பழுதாகி நின்ற பஸ் தள்ளி 'ஸ்டார்ட்' செய்த பயணியர்
நடுரோட்டில் பழுதாகி நின்ற பஸ் தள்ளி 'ஸ்டார்ட்' செய்த பயணியர்
ADDED : மே 23, 2024 11:23 PM

ஆனைமலை:பொள்ளாச்சி கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. பஸ்கள், பாதி வழியிலேயே, 'பிரேக் டவுன்' ஆகி நிற்பது; பஞ்சர் ஆவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், ஒரு சில பஸ்களில், மழைநீர் உள்ளே வருவதால், குடையுடன் பயணிக்கும் நிலை உள்ளதாக புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி - பொங்காளியூர் சென்ற அரசு பஸ் வழித்தட எண், 29, மீண்டும் கோட்டூர் வழியாக பொள்ளாச்சி நோக்கி வந்தது.
கோட்டூர் கடை வீதி அருகே வந்த போது, பஸ் பழுதடைந்து நின்றது. இதையடுத்து, பயணிகள், அவ்வழியாக சென்றோர், பஸ்சை தள்ளி, 'ஸ்டார்ட்' செய்தனர். இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடிவேலு பட காமெடியை நினைவுப்படுத்தி வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.