/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்றல் நகர் மக்கள் குடிநீருக்கு அவதி
/
தென்றல் நகர் மக்கள் குடிநீருக்கு அவதி
ADDED : மார் 04, 2025 11:23 PM
சூலுார்; போதிய குடிநீர் கிடைக்காமல் தென்றல் நகர் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் ஒன்றியம் கலங்கல் ஊராட்சிக்கு உட்பட்டது, தென்றல் நகர். இங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
குடிநீர் கேட்டு, ஊராட்சி நிர்வாகத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பல கி.மீ., துாரம் சென்று, சூலூர் பேரூராட்சி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. அங்கேயும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது.
குடிநீர் பிரச்னையால் வேலைக்கு செல்வதும் பாதிக்கப்படுகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் முறையிட்டுள்ளோம். எங்கள் பகுதிக்கான குடிநீர் பிரச்னையை அதிகாரிகள் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.