/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் மிதந்தவர் உயிருடன் வந்ததால் போலீசார் அதிர்ச்சி
/
ஆற்றில் மிதந்தவர் உயிருடன் வந்ததால் போலீசார் அதிர்ச்சி
ஆற்றில் மிதந்தவர் உயிருடன் வந்ததால் போலீசார் அதிர்ச்சி
ஆற்றில் மிதந்தவர் உயிருடன் வந்ததால் போலீசார் அதிர்ச்சி
ADDED : மே 12, 2024 10:57 PM
மேட்டுப்பாளையம்;ஆற்றில் மிதந்தவர் உயிருடன் வந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், ரயில்வே பாலத்தின் அருகே, இளைஞர் ஒருவர் தண்ணீரில் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றனர்.
ஆற்றில் மிதந்த இளைஞரை எடுத்து வர ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றனர். அவர் அருகே சென்று அவரைப் பிடித்து தூக்கிய போது, திடீரென அவர் கையை உதறியுள்ளார். இதைப் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பரிசோதனை செய்தபோது, மது போதையில் இருந்தது தெரியவந்தது.
போலீசார் இளைஞரிடம் விசாரித்த போது, அவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவ வந்தது. மது போதை அதிகமானதால் தண்ணீரில் விழுந்திருப்பது தெரியவந்தது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி சிகிச்சை அளித்து அளித்த பின்னர், போலீசார் எச்சரித்து அனுப்பினார்.