/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் பஸ்கள் வசதி வேண்டும்: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்
/
கூடுதல் பஸ்கள் வசதி வேண்டும்: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்
கூடுதல் பஸ்கள் வசதி வேண்டும்: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்
கூடுதல் பஸ்கள் வசதி வேண்டும்: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்
ADDED : ஏப் 08, 2024 10:23 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில் இருந்து, கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு பகுதியில், பஸ் வசதி போதிய அளவு இல்லாததால் பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். கிணத்துக்கடவில் இருந்து கோவைக்கு செல்லும் பயணியர், பொள்ளாச்சியில் இருந்து வரும் பஸ்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
கடந்த, 10 ஆண்டுகளில் கிணத்துக்கடவில் இருந்து கோவை மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கிராமப்பகுதியில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை சென்ற பஸ், தற்போது இரண்டு முறை மட்டுமே செல்கிறது. இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என, பஸ் பயணியர் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, மக்கள் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டுக்கு முன் கிணத்துக்கடவில் இருந்து, கோவை விமான நிலையம், பாலக்காடு மற்றும் கிணத்துக்கடவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், தற்போது இப்பகுதிக்கு பஸ் இயக்கப்படுவதில்லை.
கிணத்துக்கடவில் மக்கள் தொகை அதிகரிப்பால், அதிகமான பயணியர் பஸ்சில் பயணிக்கின்றனர். இதில், வேலைக்கு செல்பவர்கள் முதல் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன் பெறும் விதமாக, கிணத்துக்கடவில் இருந்து கோவைப்புதுார் வழியாக பேரூர் வரை பஸ் இயக்க வேண்டும்.
மேலும், கிணத்துக்கடவில் இருந்து கோவை விமான நிலையம் வரை பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

