/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைதுாக்கியது குடிநீர் பிரச்னை :தீர்வு காணுமா பேரூராட்சி நிர்வாகம்
/
தலைதுாக்கியது குடிநீர் பிரச்னை :தீர்வு காணுமா பேரூராட்சி நிர்வாகம்
தலைதுாக்கியது குடிநீர் பிரச்னை :தீர்வு காணுமா பேரூராட்சி நிர்வாகம்
தலைதுாக்கியது குடிநீர் பிரச்னை :தீர்வு காணுமா பேரூராட்சி நிர்வாகம்
ADDED : ஏப் 14, 2024 09:36 PM
பொள்ளாச்சி;சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், நீண்ட நாட்கள் இடைவெளியில் தண்ணீர் வினியோகிப்பதாலும், வீடுகளில் உள்ள கிணற்று நீர் வற்றி விட்டதாலும், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகளில், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, 4, 2.25, மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொட்டியும், தினமும் குடிநீர் நிரப்பப்பட்டு, 30 வால்வுகள் திறக்கப்பட்டு, 10 முதல், 12 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், குடியிருப்புகளின் பெருக்கம் காரணமாக, பிரதான குழாய் வாயிலாக போதிய அளவு தண்ணீர் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டதால், லாரிகளில் விலைக்கு தண்ணீர் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
மக்கள் கூறியதாவது: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கட்டுமானத்திற்காக அனைவரும் போர்வெல் அமைக்கின்றனர். இதனால், தற்போது, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
பேரூராட்சி வாயிலாக நீண்ட நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் பாதிக்கின்றனர். கூடுதலாக, மேல்நிலை தொட்டிகளை அமைப்பதுடன், பெரிய பிரதான குழாய் அமைக்கவும் திட்டமிட வேண்டும். மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

