/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சாம்பியன்ஷிப்' விருதை தட்டி சென்ற 'ரெட் ஹாக்ஸ்' அணி
/
'சாம்பியன்ஷிப்' விருதை தட்டி சென்ற 'ரெட் ஹாக்ஸ்' அணி
'சாம்பியன்ஷிப்' விருதை தட்டி சென்ற 'ரெட் ஹாக்ஸ்' அணி
'சாம்பியன்ஷிப்' விருதை தட்டி சென்ற 'ரெட் ஹாக்ஸ்' அணி
ADDED : செப் 09, 2024 01:34 AM
கோவை:ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை, 'ரெட் ஹாக்ஸ்' அணி தட்டிச்சென்றது.
ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு விழா, வட்டமலைபாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. தலைமை வனப்பாதுகாவலர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளை துவக்கிவைத்தார்.
இதில், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், பந்து எறிதல், கூடைப்பந்து, வளைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. நான்கு அணிகளாக மாணவ, மாணவியர் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களுக்கான தனிநபர் 'சாம்பியன்ஷிப்' விருதை ஆதித்யன், மாணவர்களுக்கான தனிநபர் 'சாம்பியன்ஷிப்' விருதை சங்கவி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை, 'ரெட் ஹாக்ஸ்' அணி தட்டிச்சென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. 'ரெட் ஹாக்ஸ்' அணி தலைவர்களான கோகுல்கணேஷ், லக்ஷிதா ஆகியோர் பரிசுகளை பெற்றுக்கொண்டனர். கல்லுாரி முதல்வர் ரவி, துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.