/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்டது மாநகராட்சி நகரமைப்பு பிரிவு
/
ரூ.2.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்டது மாநகராட்சி நகரமைப்பு பிரிவு
ரூ.2.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்டது மாநகராட்சி நகரமைப்பு பிரிவு
ரூ.2.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்டது மாநகராட்சி நகரமைப்பு பிரிவு
ADDED : டிச 07, 2024 06:30 AM

கோவை; கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, 6 சென்ட் 'ரிசர்வ் சைட்' நகரமைப்பு பிரிவினரால் நேற்று மீட்கப்பட்டது. இதன் மதிப்பு, ரூ.2.5 கோடியாகும்.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 27வது வார்டு, பாரதி காலனி மூன்றாவது கிராஸ் மனைப்பிரிவு, 1979ல் நகர ஊரமைப்புத் துறையால் அனுமதி பெறப்பட்டது. மொத்தம், 70 சென்ட் பரப்பளவு; 6 மனைப்பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
பொது ஒதுக்கீடு இடமாக, 7.7 சென்ட் ஒதுக்கப்பட்டு, வரைபட அனுமதி பெறப்பட்டிருக்கிறது. 'ரிசர்வ் சைட்'டில் ஒரு பகுதி, மனை எண்: 7 என குறிப்பிட்டு, 2006ல் கிரையம் செய்யப்பட்டிருக்கிறது. 1.7 சென்ட் பரப்பு ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கண்டறிந்தனர்.
வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, உதவி பொறியாளர் திருமூர்த்தி ஆகியோர் அவ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். ஆவணங்களை சரிபார்த்து, காலியிடமாக இருந்த, 6 சென்ட் 'ரிசர்வ் சைட்'டை உறுதி செய்ததும், மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை நட்டனர்.
18 ஆண்டுகளுக்குப் பின், இவ்விடம் மீட்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள மீதமுள்ள, 1.7 சென்ட் நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது; மாநகராட்சிக்குச் சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டு, மீட்கப்படும், என, நகரமைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.