/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்வு முடிந்து நான்கு மாதம் ஆகியும் முடிவு தெரியவில்லை
/
தேர்வு முடிந்து நான்கு மாதம் ஆகியும் முடிவு தெரியவில்லை
தேர்வு முடிந்து நான்கு மாதம் ஆகியும் முடிவு தெரியவில்லை
தேர்வு முடிந்து நான்கு மாதம் ஆகியும் முடிவு தெரியவில்லை
ADDED : மார் 07, 2025 08:12 PM
அன்னுார்:
நேர்முகத் தேர்வு முடிந்து, நான்கு மாதங்கள் ஆகியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கான முடிவு வெளியிடப்படவில்லை.
அன்னுார் வட்டாரத்தில் 80க்கும் மேற்பட்ட முழு நேர, பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. கோவை மாவட்டத்தில், ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்காக கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி நேர்முகத்தேர்வு நடந்தது.
கோவை மாவட்டத்தில், 129 விற்பனையாளர்கள், 70 எடையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு, நேர்முக தேர்வு நடந்தது. டிசம்பர் 25ம் தேதி தேர்வு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேர்முகத்தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆகியும், இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் வெளியாகவில்லை. நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இதனால் பல இடங்களில் ரேஷன் கடைகளில் போதிய ஊழியர்கள் இல்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் தாங்கள் தேர்வு பெற்றோமா, இல்லையா, என்று தெரியாத நிலையில் உள்ளனர்.
'அரசு விரைவில் தேர்வு பட்டியல் வெளியிட வேண்டும்' என நேர்முகத் தேர்வில் பங்கேற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.