/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பாடம் படிக்க வந்தாச்சு! இனிப்பு வழங்கி, கிரீடம் சூட்டி மாணவர்களுக்கு வரவேற்பு
/
பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பாடம் படிக்க வந்தாச்சு! இனிப்பு வழங்கி, கிரீடம் சூட்டி மாணவர்களுக்கு வரவேற்பு
பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பாடம் படிக்க வந்தாச்சு! இனிப்பு வழங்கி, கிரீடம் சூட்டி மாணவர்களுக்கு வரவேற்பு
பள்ளிக்கூடம் திறந்தாச்சு... பாடம் படிக்க வந்தாச்சு! இனிப்பு வழங்கி, கிரீடம் சூட்டி மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 11, 2024 12:07 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வந்த மழலைகள், புதியதாக சேர்ந்த குழந்தைகள், பெற்றோரை பிரிய மனமில்லாமல், கண்களில் கண்ணீருடன் விடை கொடுத்து, ஆசிரியர்களுடன் சென்றனர்.
* பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும், பள்ளி முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியான சூழலுடன் அவர்களை வரவேற்றதால் உற்சாகமாக வந்தனர்.
* பாலகோபாலபுரம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், புதிய மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கிரிடம் சூட்டி வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் பூம்பாவை மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன.
* பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக, அனைத்து குழந்தைகளுக்கும் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, பறை இசைத்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
பள்ளியின் நுழைவாயில் இருந்து, பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருபுறமும் நின்று கைகளை தட்டியும், புதிய மாணவர்கள் மீது பூக்களைத் துாவியும் வரவேற்றனர். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி மற்றும் தமிழாசிரியர் பாலமுருகன் பங்கேற்றனர்.
* சேத்துமடை அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் டவுன், சார்பில், 20 பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்பனர், கணித உபகரணங்கள் என, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
ரோட்டரி கிளப் சார்பில் நிர்வாகி பிரேம்குமார், தலைவர் பிரபு, செயலாளர் கார்த்திக் பங்கேற்று பொருட்களை வழங்கினர். ஒடையகுளம் விவசாயி முரளி, ஆசிரியர் மாசிலாமணி பங்கேற்றனர்.
* கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் சார்மிளா, மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் வண்ண தொப்பிகள் அணிவித்து வரவேற்றார். மாணவர்களுக்கு விலையில்லா பாடநுால், பாட குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் தினகரன், ஆசிரியர் சத்தியா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் வெண்ணிலா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
* நேதாஜி ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மாணவர்களுக்கு இனிப்பு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஜெய்லாபுதீன், துணைத் தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சித்ராதேவி வரவேற்றார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு பூங்கொத்துகள் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார். வெள்ளாளபாளையம் ஊராட்சி தலைவர் பத்மபிரியா, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்து பாடப்புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் வழங்கினர்.பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மனோரஞ்சிதம், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கோதவாடி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், பி.டி.ஏ., தலைவர் இந்திராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
உடுமலை
உடுமலையில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவ, மாணவியர் உற்சாகத்துடன், வகுப்பறைக்கு சென்றனர். பல்வேறு பள்ளிகளில், மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, வகுப்புகள் துவங்கியது.
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நேற்று மாணவர்களுக்கு, முதல் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளைஆசிரியர் கண்ணபிரான் வழங்கினார். முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சாவித்ரிக்கு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சுஜினி நன்றி தெரிவித்தார்.

