/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வறுத்தெடுக்கிறது வெயில்; 50 இடங்களில் நீர் மோர் பந்தல்
/
வறுத்தெடுக்கிறது வெயில்; 50 இடங்களில் நீர் மோர் பந்தல்
வறுத்தெடுக்கிறது வெயில்; 50 இடங்களில் நீர் மோர் பந்தல்
வறுத்தெடுக்கிறது வெயில்; 50 இடங்களில் நீர் மோர் பந்தல்
ADDED : பிப் 24, 2025 11:54 PM

கோவை, ; கோவை மாநகராட்சி சார்பில், நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பொதுமக்கள் அதிகமாக கூடும், 50 இடங்களில் துவக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கோவை நகர்ப்பகுதியில் சில நாட்களாக வெயில் கடுமையாக காணப்படுகிறது. காலை, 11:00 முதல் பிற்பகல், 4:00 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. பணி நிமித்தமாக நகரை சுற்றி வருபவர்கள், சோர்ந்து விடுகின்றனர். தாகம் தணிக்க ஜூஸ், இளநீர், கம்பங்கூழ் அருந்துகின்றனர்.
மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில், முதல்கட்டமாக, 50 இடங்களை தேர்வு செய்து, இலவசமாக நீர் மோர் பந்தல் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடாகம் ரோட்டில் இடையர்பாளையம் அருகே அமைத்துள்ள நீர் மோர் பந்தலை, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று துவக்கி வைத்தனர்.
மாநகராட்சி கமிஷனர் கூறுகையில், ''முதல்கட்டமாக, 50 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்படும். வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க, கடந்தாண்டு சிக்னல்களில் பச்சை பந்தல் போடப்பட்டது. தற்போது பல இடங்களில் சிக்னல் முறை அகற்றப்பட்டு, 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
''எந்தெந்த இடத்தில் பச்சை பந்தல் அமைக்க வேண்டுமென பொறியியல் பிரிவினர் ஆய்வு செய்கின்றனர். தேவையான இடங்களில் பச்சை பந்தல் அமைக்கப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, கல்வி குழு தலைவர் மாலதி, உதவி கமிஷனர் துரைமுருகன், உதவி நிர்வாக பொறியாளர் சபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

