/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இன்று நடக்கிறது 'நாம்' இயக்கத்தின் மாநில செயற்குழு
/
கோவையில் இன்று நடக்கிறது 'நாம்' இயக்கத்தின் மாநில செயற்குழு
கோவையில் இன்று நடக்கிறது 'நாம்' இயக்கத்தின் மாநில செயற்குழு
கோவையில் இன்று நடக்கிறது 'நாம்' இயக்கத்தின் மாநில செயற்குழு
ADDED : ஏப் 06, 2024 07:20 AM
கோவை : 'நாம்' இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், கோவையில் இன்று நடக்கிறது. விவசாயம், விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கமான, 'நாம்' மாநில செயற்குழு கூட்டம், கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் எதிரே, ஆர்.வி.ஹோட்டலில் இன்று மதியம், 2:30 மணிக்கு நடக்கிறது.
மாநில தலைவர் பிரபுராஜா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகளின் நலன் கருதி, பல்வேறு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
தேங்காய் கொள்முதல், ரேஷன் அட்டைக்கு தலா, 1 லிட்டர் தேங்காய் எண்ணெய், தலா, 10 தேங்காய்கள் வழங்குவது, தென்னை, கள் அனுமதி, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.5,000 பென்ஷன், விவசாய குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட, பல்வேறு முக்கிய விஷயங்கள், கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
'நாம்' மாநில தலைவர் பிரபுராஜா கூறுகையில், ''ரேஷன் அட்டைக்கு தேங்காய் எண்ணெய், தேங்காய்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உற்பத்திக்கேற்ற விலை இல்லாததால், விவசாயம் அழிந்து வருகிறது. இதை தடுக்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில செயற்குழு கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்,'' என்றார்.

