/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை வெயில் கொதிக்கிறது 'சுடச்சுட' விற்பனையாகிறது ஏ.சி.,!
/
கோடை வெயில் கொதிக்கிறது 'சுடச்சுட' விற்பனையாகிறது ஏ.சி.,!
கோடை வெயில் கொதிக்கிறது 'சுடச்சுட' விற்பனையாகிறது ஏ.சி.,!
கோடை வெயில் கொதிக்கிறது 'சுடச்சுட' விற்பனையாகிறது ஏ.சி.,!
ADDED : ஏப் 25, 2024 06:33 AM

கோடை வெயில் கொதிப்பதால், கோவையில் ஏ.சி., விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு வெயில் சுட்டெரிக்கிறது. கோவையில் தொடர்ந்து, பல நாட்களாக 35 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இரவு நேரங்களிலும் உள்ளது. புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் உறக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனால் ஏ.சி., பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இருமடங்காக அதிகரித்துள்ளது. இரவு பகல் எல்லா நேரங்களிலும், ஏ.சி., நிற்காமல் இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக வெயில் காலத்தில், ஏ.சி., விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏ.சி., விற்பனை, இருமடங்கு அதிகரித்து இருப்பதாக, விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
கோவை பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஏ.சி., விற்பனை பிரிவு மேலாளர் ஞானவேல் கூறுகையில், ''ஏ.சி., விற்பனை, கடந்த இரண்டு மாதங்களாக இரு மடங்கு அதிகமாகி உள்ளது. கோவையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் கிளைகளில் தினமும், 200 முதல் 250 ஏ.சி.,க்கு மேல் விற்பனையாகிறது. இதற்கு முன், இந்த அளவுக்கு விற்பனை அதிகமானதில்லை. 1.5 டன் ஏ.சி., இன்வெர்ட்டர் மாடல் அதிகம் விற்பனையாகிறது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் 3 ஸ்டார், 5 ஸ்டார் ஏ.சி.,யை விரும்பி வாங்குகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

