/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு லட்சம் விதை பந்துகள் தூவ இலக்கு
/
ஒரு லட்சம் விதை பந்துகள் தூவ இலக்கு
ADDED : மே 19, 2024 10:48 PM
அன்னுார்;அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு லட்சம் விதை பந்துகள் துாவ, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அன்னுார் சொக்கம்பாளையத்தில் உள்ள மக்கள் நல சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை சார்பில், விதைப்பந்துகள் கொடுக்கும் நிகழ்ச்சி, அன்னுார் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சாந்தமூர்த்தி வரவேற்றார். அன்னுார் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், வடக்கு ஒன்றிய தலைவர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர்.
அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் கெம்மநாயக்கன்பாளையம் குளம், குன்னத்தூர் குட்டை ஆகிய இடங்களில் விதை பந்துகள் துவக்கப்பட்டன.
இது குறித்து அறக்கட்டளை தலைவர் சரவணகுமார் கூறியதாவது: அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர் நிலைகளில் ஒரு லட்சம் விதை பந்துகள் விதைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக கெம்பநாயக்கன்பாளையம் குளத்திலும், குன்னத்தூர் குட்டையிலும், 2000 விதை பந்துகள் வீசப்பட்டுள்ளன.
மழைக்காலம் முடிவதற்குள், 25 ஆயிரம் விதைப்பந்துகள் தூவ முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள், அன்னுார் ஊராட்சி ஒன்றியங்களில், ஒரு லட்சம் விதை பந்துகள் தூவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு தலைவர் கூறினார்.

