/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் செயல்படுகிறது வரி செலுத்தும் இணையதளம்
/
மீண்டும் செயல்படுகிறது வரி செலுத்தும் இணையதளம்
ADDED : மே 06, 2024 12:15 AM
கோவை;வரியினங்கள் செலுத்தும் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் வரிதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை நகராட்சி நிர்வாகத் துறையின், https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரிதாரர்கள் செலுத்திவருகின்றனர்.
கடந்த மாத இறுதி முதல் ஒரே சமயத்தில் பெரும்பாலானோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முழுமையாக செயல்படுவதில் சுணக்கம் இருந்தது. கடந்த, 2ம் தேதி முழுமையாக செயல்படாததால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். தற்போது, இணையதளம் பராமரிக்கப்பட்டு முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் வரிதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.