/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபர் அடித்துக் கொலை; காரணம் என்ன?
/
வாலிபர் அடித்துக் கொலை; காரணம் என்ன?
ADDED : ஜூலை 23, 2024 02:13 AM

சூலுார்:சுல்தான்பேட்டை அடுத்த ஓடக்கல் பாளையம் காட்டுப்பகுதியில், பலத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக, சுல்தான்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் சடலமாக கிடந்தது அதே ஊரை சேர்ந்த மாரப்பன் மகன் பரமசிவன், 28, என்பது தெரிந்தது. பால் வியாபாரம் செய்து கொண்டு, கோழிப்பண்ணைக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். திருமணமாகாத அவர், சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல், ஊர் சுற்றி வந்ததும் தெரிந்தது. இந்நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சம்பவ இடத்தில், எஸ்.பி., பத்ரி நாராயணன், டி.எஸ்.பி., தங்கராமன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
வாலிபர் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தார்கள் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.