/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓயாத வக்கீல்கள் போராட்டம் நாளை மீண்டும் மனித சங்கிலி
/
ஓயாத வக்கீல்கள் போராட்டம் நாளை மீண்டும் மனித சங்கிலி
ஓயாத வக்கீல்கள் போராட்டம் நாளை மீண்டும் மனித சங்கிலி
ஓயாத வக்கீல்கள் போராட்டம் நாளை மீண்டும் மனித சங்கிலி
ADDED : ஆக 27, 2024 12:38 AM
கோவை;மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு எதிராக, வக்கீல்கள் நாளை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் (ஜேக்), தொடர் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்திலிருந்து சென்ற வக்கீல்கள், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அடுத்த கட்ட போராட்டமாக, 'ஜேக்' பொதுக்குழுவின் அறிவிப்புபடி, வரும் 28ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களின் நுழைவு வாயில் முன்பாகவும் மனித சங்கிலி மற்றும் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
அறப்போராட்டம் வெற்றி அடைய, அனைத்து வக்கீல் சங்கத்துடன், வக்கீல்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று, கூட்டுக் குழு- தலைவர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.