/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியின் நீர் மட்டம் 42.11 அடியாக குறைந்தது
/
சிறுவாணியின் நீர் மட்டம் 42.11 அடியாக குறைந்தது
ADDED : ஆக 02, 2024 05:13 AM
கோவை : மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சிறுவாணி அணை நீர் மட்டம், 42.11 அடியாக குறைந்தது.
கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, தமிழக - கேரள வனத்தின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதன் பராமரிப்பு, கேரள மாநில நீர்ப்பாசனத்துறை வசம் இருக்கிறது. பராமரிப்புக்கு ஏற்படும் செலவினத்தை, கோவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது.
அணையின் மதகு பகுதியில் நீர்க்கசிவு ஏற்படுவதால், பாதுகாப்பு காரணங்களை கூறி, சில ஆண்டுகளாக, 45 அடிக்கு மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. நடப்பாண்டு, 42 அடியை தாண்டினாலே மதகை திறந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த, 30ம் தேதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 162 மி.மீ., மழை பதிவானது. அதனால், 44.08 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. இதன் காரணாக, மதகை திறந்து, தண்ணீர் வெளியேற்றியதால், மறுநாள் 31ம் தேதி, 42.38 அடியாக குறைந்தது.
நேற்று (ஆக., 1) காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில் 32 மி.மீ., அடிவாரத்தில் 10 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. தண்ணீரை வெளியேற்றியதால், 42.11 அடியாக நீர் மட்டம் குறைந்தது.