/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றுடன் மாறியது வானிலை மழை பெய்யுமென நம்பிக்கை
/
காற்றுடன் மாறியது வானிலை மழை பெய்யுமென நம்பிக்கை
ADDED : மே 09, 2024 04:58 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் கடந்த இரு நாட்களாக, அனல் காற்றுக்கு பதிலாக குளிர்ந்த காற்று வீசத்துவங்கியுள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் வழக்கத்தை விட, இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு, எதிர்பார்த்த மழை பொழிவு இல்லாத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில், ஏப்., மாதத்தில் இருந்து, கடும் வெயில் நிலவுகிறது. இதனால், சித்திரை பட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடியை தவிர்த்தனர். மேலும், அனல் காற்றாக வீசியதால் மக்கள் அவதிப்பட்டனர். கடந்த இரு நாட்களாக, அனல் காற்றுக்கு பதிலாக, குளிர் காற்று வீசுகிறது. பகலில் வானிலை மேக மூட்டமாக காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் துாறல் மழை பெய்கிறது. இதனால், கோடை மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.