/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசியாவின் அதிசயமே... உன் பார்வை ஒன்று போதுமே!
/
ஆசியாவின் அதிசயமே... உன் பார்வை ஒன்று போதுமே!
ADDED : செப் 07, 2024 01:54 AM

கோவை;கோவை புலியகுளத்திலுள்ள முந்திவிநாயகர், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர். 20 அடி உயரமும் 11 அடி அகலமும், 190 டன் எடை கொண்டது.
இந்த விநாயகர் கல்லில் செதுக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையாகும். குழப்பத்தில் சிக்கித்தவிப்பவர்களுக்கு, எளிதாக தீர்வு வழங்கும் சக்தியுள்ளவர் என்பது கோவை மக்களின் நம்பிக்கை.
கோவிலுக்கு வெளியே சாலையில் நின்று கொண்டே, இந்த மெகா விநாயகரை தரிசிக்க முடியும். இவரது அற்புத சக்தியை உணர்ந்து, உள்ளூர் மட்டுமல்ல, வெளியூர் பக்தர்களும் அதிகமாக தரிசனம் பெற வருகின்றனர்.
அன்றாடம் அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மலைகளை சமர்ப்பிப்பதை தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். புதிய வாகனங்கள் வாங்குவோர், புலியகுளம் விநாயகரின் ஆசியோடுதான், தங்கள் பயணத்தை துவக்குகின்றனர்.
முந்திவிநாயகர் சிலைக்கு நான்கு கைகள் உள்ளன. ஒன்று மகாபாரதத்தை எழுதுவதற்காக ஒரு தந்தத்தை ஏந்தியும், மற்றொன்று அங்குசத்தை ஏந்தியும், மூன்றாவது கை பலாப்பழத்தை ஏந்தியும், நான்காவது சாட்டையை ஏந்தியும் காட்சியளிக்கிறார்.
காலையில் இவரை ஒரு கணம் தரிசித்து சென்றால், நாள் முழுவதும் எடுத்த காரியமெல்லாம் வெற்றிதான்!