/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டையில் விழுந்து தொழிலாளி பலி
/
குட்டையில் விழுந்து தொழிலாளி பலி
ADDED : மே 23, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;சூலூர் அடுத்த பீடம்பள்ளி பிரிவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 31. கூலித்தொழிலாளி. நேற்று முன் தினம் மதியம் கண்ணம்பாளையம் மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ள குட்டையில் மீன் பிடித்துக்கொண்டி ருந்தார். அப்போது, தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கினார்.
அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.