/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தியேட்டர், மால்களுக்கு மவுசு; வெயில் தாக்கம் எதிரொலி
/
தியேட்டர், மால்களுக்கு மவுசு; வெயில் தாக்கம் எதிரொலி
தியேட்டர், மால்களுக்கு மவுசு; வெயில் தாக்கம் எதிரொலி
தியேட்டர், மால்களுக்கு மவுசு; வெயில் தாக்கம் எதிரொலி
ADDED : ஏப் 26, 2024 01:02 AM

கோவை;வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தியேட்டர்களில் பகல் காட்சிக்கு வருவோர் எண்ணிக்கை, மால்களுக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டுகளை விட நடப்பாண்டு வெயிலின் தாக்கம் புதிய வரலாறை படைத்து வருகிறது. குறிப்பாக கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் கோடை வாஸ்தலங்களையும், தீம் பார்க்குகளையும் நாடிச் செல்லத் துவங்குகின்றனர்.
நடுத்தர மக்கள், தங்களது நிதி நிலைக்கு ஏற்றார் போல், தியேட்டர்கள், மால்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக, தியேட்டர்கள், மால்களுக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில்,''மாநிலம் முழுவதும் தற்போது பகல் நேர வெப்பநிலை உயர்ந்துள்ளது. தியேட்டர்களில் ஏ.சி., இருப்பதால் வீட்டில் இருக்க முடியாமல், திரைப்படம் பார்க்க சென்றால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம் என, மக்கள் எண்ணுகின்றனர். இதன் காரணமாக சமீபகாலமாக தியேட்டர்களில் பகல் காட்சிக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக, பார்வையாளர்கள் வருகை, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது,'' என்றார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புரோசோன் மால் விற்பனை பிரிவு தலைமை அலுவலர் பிரிங்க்ஸ்டன் கூறுகையில்,''எங்களது மாலுக்கு வருவோர் எண்ணிக்கை, 30 - 35 சதவீதம் உயர்ந்துள்ளது. பொதுவாக மால்களுக்கு கோடை விடுமுறையில், பொருட்கள் வாங்க வருவோர் எண்ணிக்கை சற்று உயரும்.
ஆனால், தற்போது வெயி லின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தை தவிர்க்க மாலுக்கு வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது,'' என்றார்.

