ADDED : ஆக 03, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அன்னூரில், தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி, தூக்கிலிடப்பட்டவர் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை. அவருடைய 219வது நினைவு தினம், நேற்று அன்னூரில் அனுசரிக்கப்பட்டது.
அன்னூர் பயணியர் மாளிகை முன்பு, அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்ன மலையின் படத்துக்கு, சாய் செந்தில் தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டது. நவீன் குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தீரன் சின்னமலையின் சுதந்திரப் போராட்ட பணிகள் குறித்து நிர்வாகிகள் பேசினர்.
நினைவு தினத்தை முன்னிட்டு, வாகன பேரணி நடந்தது. தீரன் சின்னமலையை வாழ்த்தி, கோஷம் எழுப்பப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.