ADDED : ஆக 04, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 219வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவபடத்துக்கு எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செய்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி நகராட்சி, 34வது வார்டு சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கவுன்சிலர் வைஷ்ணவி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் செந்தில்குமார், பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.