/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்
/
இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்
இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்
இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஆக 03, 2024 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர்காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.
அவர் பேசும்போது, “இந்து முன்னணி சார்பில், 77வது சுதந்திர தினம் வீரத் தியாகிகள் தினமாக கொண்டாடப்படும். ரத்த தான முகாம் நடத்தப்படும். வரும் 16ம் தேதி, இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் அம்மன் மஞ்சள் நீரபிஷேக விழா, செல்வபுரத்தில் நடைபெறும்,” என்றார்.
மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாவட்டத் தலைவர் தசரதன், நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.