/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
/
பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூலை 01, 2024 11:35 PM
வடவள்ளி:வடவள்ளியில், பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து, 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
வடவள்ளி, கருப்புசாமி முதலியார் வீதியை சேர்ந்தவர் நவீன் குமார்,29. தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, தாய், தந்தை வேலைக்கு சென்ற பின், நவீன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
பகல், 1:00 மணிக்கு, சாப்பிடுவதற்காக தந்தை செல்வராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. செல்வராஜ், மகன் நவீன் குமாரிடம் தெரிவித்துள்ளார். நவீன் குமார் விரைந்து வந்து வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.
நவீன் குமார் அளித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.