/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு பூட்டு உடைத்து ரூ.24 ஆயிரம் திருட்டு
/
வீட்டு பூட்டு உடைத்து ரூ.24 ஆயிரம் திருட்டு
ADDED : மே 21, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;வீட்டின் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் ரொக்கத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி, தில்லை நகரை சேர்ந்தவர் சென்னம்மாள், 35. நேற்று முன்தினம் தனது மகளுடன் சகோதரியின் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ரூ.24 ஆயிரம் திருட்டு போயிருந்தது. சென்னம்மாள், ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

