/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.3.75 லட்சம் திருட்டு; ஒர்க் ஷாப் உரிமையாளர் புகார்
/
ரூ.3.75 லட்சம் திருட்டு; ஒர்க் ஷாப் உரிமையாளர் புகார்
ரூ.3.75 லட்சம் திருட்டு; ஒர்க் ஷாப் உரிமையாளர் புகார்
ரூ.3.75 லட்சம் திருட்டு; ஒர்க் ஷாப் உரிமையாளர் புகார்
ADDED : ஜூலை 16, 2024 01:32 AM
கோவை;ஒர்க் ஷாப்பில் வைத்திருந்த ரூ.3.75 லட்சம் சேமிப்பு தொகை திருடுபோனது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்,48, பாப்பநாயக்கன்பாளையத்தில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவரிடம் சுண்டக்காமுத்துாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,47, என்பவர் பணியில் சேர்ந்தார். பிளாஸ்டிக் பெட்டியில் ராஜேஷ் ரூ.3 லட்சத்து, 75 ஆயிரத்து, 500ஐ சேமித்து வைத்துள்ளார். கடந்த மாதம், 12ம் தேதி முதல் கிருஷ்ணமூர்த்தி பணிக்கு வராமல், மொபைல் போனையும் அணைத்து வைத்துள்ளார்.
கடந்த, 2ம் தேதி ஒர்க் ஷாப்பில் இருந்த சேமிப்பு தொகை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி இத்தொகையை திருடியதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்க, விசாரணை நடந்துவருகிறது.