/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
ADDED : ஏப் 12, 2024 12:34 AM
கோடை விடுமுறையில், பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத் தால் சிறுவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக் கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.
'பெதர் பீட்' டேன்ஸ் அகாடமி
ஹிப் ஹாப், ஹவுஸ், கன்டெம்ப்ரரி, லாக்கிங், சினிமேட்டிக் போல்க், லைட்பீட், ஜூம்பா, ஏரோபிக்ஸ் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: ஹாப்பி ட்ரீ கிட்ஸ் ஸ்கூல், சோமையம்பாளையம், தொடர்புக்கு: 77081-83010.
இன்ஸ்டிடியூட் ஆப் மல்டிமீடியா
கிராபிக் டிசைன், டிஜிட்டல் ஆர்ட் ஆகியன கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 8 முதல் 14 வயதுக்குட்பட்டோர் கலந்துகொள்ளலாம். முகவரி: காந்திபுரம், தொடர்புக்கு: 81224-37026, 98436-40666.
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி
ஸ்பெசிபிக் அத்லெட்டிக் டிரெயினிங், பிட்னஸ் கிளாஸ், டிபென்ஸ் பிசிக்கல் டிரெயினிங், லீடர்சிப் ஸ்கில்ஸ், குரூப் ஆக்டிவிட்டி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: நேரு ஸ்டேடியம், பயனீர் இன்ஸ்டிடியூஷன், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், பி.என். புதூர் உள்ளிட்ட பகுதிகள். தொடர்புக்கு: 78452-85967, 94871-17356.
அனன் இன்டர்நேஷனல் ஸ்கூல்
ஸ்டிரேடஜிக் அண்ட் டிரெடிஷனல் கேம்ஸ், ஸ்கில்புல் ஹேண்ட் ஒர்க்ஸாப், சாப்டர் சாட்-லெட்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் புக், குக்கிங், பேக்கிங் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: காளப்பட்டி. தொடர்புக்கு: 88070-11911, 90475-27000.
லிட்டில் ஜிம்
பிரிக்ஸ் பார் கிட்ஸ், ஜிம் டைம், ஆர்ட் அண்ட் கிராப்ட் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 3 முதல் 12 வயதுக்குட்பட்டோர் கலந்துகொள்ளலாம். முகவரி: பீளமேடு, தொடர்புக்கு: 9566819111.
கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.

